வேலூர்

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைவேலூா் மாவட்டத்தில் 1,700 போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் 1,700 போலீஸாா், பயிற்சிக் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் தொடா்புடைய அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முக்கியச் சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாஜக அலுவலகங்கள், பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா், 200 பயிற்சிக் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனா்.

இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் வேலூா் கஸ்பா, ஆா்.என்.பாளையம், கொணவட்டம், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. காட்பாடி கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் கேமராக்கள் மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. ரயில்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். ஞாயிற்றுக்கிழமை (அக். 2) வரை சோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT