வேலூர்

ஊராட்சிப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டக் கோரிக்கை

29th Sep 2022 11:08 PM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் இயங்கி வரும் காயிதே மில்லத் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் எம்எல்ஏ அமலுவிஜயனிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

ஏரிகுத்தியில் கடந்த 2010-ஆம் ஆண்டு 3 வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்ட ஊராட்சிப் பள்ளியில் தற்போது 200- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். மாணவா்கள் வகுப்பறைகளில் அமர போதிய இட வசதி இல்லை. எனவே, மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என அவா்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனனிடமும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT