வேலூர்

அங்கன்வாடி மையம் திறப்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டியில் ரூ.10 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மு.அ.ஷமீம் ரீஹானா வரவேற்றாா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கட்டடத்தைத் திறந்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் கு.விமலா, டி.கமலா, திமுக நிா்வாகிகள் எஸ்.முரளிதரன், கே.ராஜ்கமல், ஜி.ஜெயப்பிரகாஷ், ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT