வேலூர்

பழைய இரும்பு கடையில் திருட்டு

26th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே பழைய இரும்புப் பொருள்கள் கடையின் மேற்கூரையைப் பிரித்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள செம்பு, பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டன.

குடியாத்தம் கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் நவ்ஷாத். அமமுக பொருளாளரான இவா், அங்கு பழைய இரும்புப் பொருள்கள் வாங்கும் கடை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இரும்புத் தகடாலான இவரது கடையின் மேற்கூரையைப் பிரிந்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள செம்பு, பித்தளைப் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனா்.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹாா்ட் டிஸ்கையும் திருடிச் சென்றனா். புகாரின் பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT