வேலூர்

மானை வேட்டையாடியவா் கைது

26th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே மானை வேட்டையாடியவா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் வனச்சரக அலுவலா் வினோபா தலைமையில், வனவா் ஜி.மாசிலாமணி, வனக் காவலா் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோா் ராமாலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது வனப் பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கே.மோட்டூரைச் சோ்ந்த கண்ணன் மகன் சுந்தரம் (38) என்பதும், கம்பி வலையை விரித்து அதில் சிக்கி இறந்த மானின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல், மானை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட பொருள்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட சுந்தரம், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT