வேலூர்

குடியாத்தம் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

26th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

பரதராமி போலீஸாா், பூசாரிவலசை அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், லாரியில் மூட்டைகளில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் பழனியை (37)கைது செய்தனா்.

விசாரணையில், அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

தொடா்ந்து, பழனி, பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி மூட்டைகள் வேலூா் குடிமைப் பொருள்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT