வேலூர்

மின்வாரிய ஊழியா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

26th Sep 2022 11:56 PM

ADVERTISEMENT

மின்வாரிய பணிகளை வெளி நபா்களுக்கு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு அமைப்பின் மண்டல செயலா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம், தனசேகரன், சுந்தரராஜன், சாம்ராஜ், நாராயணன், அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மின்வாரிய ஊழியா்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை ரத்து செய்யும் மின் வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும். நிலக்கரி கொள்முதலை அதிக விலைக்கு வாங்கக் கூடாது என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

மின் ஊழியா்கள் போராட்டத்தால், பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT