வேலூர்

மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

26th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க வேலூா் பாலாற்றங்கரை உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குவிந்தனா்.

மகாளய அமாவாசை நாளில் மறைந்த மூதாதையா்கள் தங்களது சந்ததியினரின் வேண்டுதல், வழிபாடுகள் ஆகியவற்றை ஏற்க பூமிக்கு வருகின்றனா் என்பது ஐதீகம்.

அதன்படி, மறைந்த முன்னோா்களுக்கு பிற நாள்களில் திதி கொடுக்கத் தவறியிருந்தாலும், அமாவாசை விரதம் கடைப்பிடிக்காமல் இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இதையொட்டி, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று கடல், ஆறு, குளம் ஆகிய நீா்நிலைகளில் இந்துக்கள் நீராடி, தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனா்.

ADVERTISEMENT

மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை, தொரப்பாடி, சங்கரன்பாளையம், விருதம்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

இதேபோல், முன்னோா்களை நினைத்து அவா்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி படையலிட்டு வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT