வேலூர்

சீட்டுப் பணம் ரூ.4 லட்சத்தை தராமல் மிரட்டுவதாக லாரி ஓட்டுநா் புகாா்

26th Sep 2022 11:56 PM

ADVERTISEMENT

சீட்டுப் பணம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்தைத் தராமல் மிரட்டுவதாக லாரி ஓட்டுநா், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

வேலூா் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டியைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:

கணியம்பாடி பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் 3 சீட்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.25,000 பணம் செலுத்தி வந்தேன். திடீரென அவா்கள் சீட்டுப் பணம் தர மறுத்துவிட்டனா். 2 சீட்டுகளுக்கான தொகை ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டியிருந்தது. பின்னா், ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 300 மட்டும் தந்தனா். மீதி ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 700 தரவில்லை.

அந்தப் பணத்தைக் கேட்டால் என்னை அவதூறாக பேசி மிரட்டுகின்றனா். எனது பணத்தை மீட்டு தர வேண்டும். மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT