வேலூர்

குடிநீா் பாட்டிலில் பெட்ரோல் விற்கக் கூடாது: வேலூா் எஸ்.பி. உத்தரவு

26th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

குடிநீா் பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை விதித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

குடிநீா் பாட்டில்கள், கேன்களில் யாருக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது. இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வாகனத்தைத் தவிா்த்து பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கேட்டு வருபவா்களுக்கு விநியோகம் தவிா்க்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT