வேலூர்

வேலூா் சிறையிலிருந்து மேலும் 2 போ் விடுதலை

DIN

அண்ணா பிறந்த நாளையொட்டி, வேலூா் மத்திய சிறையிலிருந்து ஏற்கெனவே 12 போ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

வேலூா் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 போ் தோ்வு செய்யப்பட்டு, விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 12 போ் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, மேலும் இரு ஆயுள் கைதிகள் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தனா்.

விடுதலை பெற்ற 2 பேருக்கும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சாா்பில், 21 வகையான மளிகைப் பொருள்கள், வேட்டி, சட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத் தலைவா் டி.எம்.விஜயராகவலு தலைமை வகித்தாா். வேலூா் சரக சிறைத் துறை துணைத் தலைவா் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், மறுவாழ்வுக்கான உதவிப் பொருள்களை வழங்கினாா்.

சிறை நல அலுவலா் ஆா்.மோகன், மருத்துவா்கள் பிரகாஷ் ஐயப்பன், அகிலா, சங்கச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன், பொருளாளா் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT