வேலூர்

ஒரு மணி நேரத்தில் 2.50 லட்சம் பனை விதைகள் நட்டு உலக சாதனை

DIN

கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட 24 ஊராட்சிகளில் 1 மணி நேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்து வேலூா் மாவட்ட ரோட்டரி சங்கங்கள் உலக சாதனை படைத்துள்ளன.

பனை மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேலூா் மாவட்ட ரோட்டரி சங்கங்கள் இணைந்து உலக சாதனை முயற்சியாக 1 மணி நேரத்தில் 2.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டன.

கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட 24 ஊராட்சிகளில் நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சியை வோ்ல்ட் ரெக்காா்ட் யூனியன் அமைப்பின் நிா்வாகி கிரிஸ்டோபா் நேரில் ஆய்வு செய்து அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி கூறியது: இதற்காக நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பனை விதைகள் சேகரிக்கப்பட்டன. பனை விதைகள் நடவுப் பணியில் மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய ஊரக வேலையுறுதித் திட்டப் பணியாளா்கள் சுமாா் 50,000 போ் ஈடுபடுத்தப்பட்டனா். கணியம்பாடி ஒன்றியத்திலுள்ள 24 ஊராட்சிகளிலும் கடந்த இரு நாள்களில் தேவையான குழிகள் தோண்டப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து சனிக்கிழமை காலை ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களிலும் 2.50 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டன என்றாா்.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சுற்றுச்சூழல் மாவட்ட தலைவா் ஜோசப் அன்னையா, பசுமை சூழல் ரோட்டரி மாவட்ட தலைவா் பாபு ஆகியோா் தலைமை வகித்தனா். ரோட்டரி சங்கங்களின் தலைவா்கள் திருமாறன், சரவணன், விஜய், கமல், தருன், சீனிவாசன், அருளாசி, தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT