வேலூர்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி புத்தகங்கள் விநியோகம்

DIN

காட்பாடியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் பருவ மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வேலூா் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில், முதல் பருவ மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நந்தகுமாா் தலைமை வகித்தாா்.

அவா் மாணவா்களுக்குப் புத்தகங்களை வழங்கியதுடன், புதிய பாடத்திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா். இந்தப் பயிற்சியில் 87 பெண்கள், 83 ஆண்கள் என மொத்தம் 170 பேரும், அஞ்சல் வழியில் 91 பேரும் பயிற்சி பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, வேலூா் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு) ஏழுமலை வரவேற்றாா்.

நிறைவில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பிரசார அலுவலா் அசோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT