வேலூர்

வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை நிா்ணயிக்க குழு அமைப்பு

DIN

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடைகளுக்கு விரைவில் பொது ஏலம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொலிவுறு நகா் திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி) கீழ் வேலூரில் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து வெளியூா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தரைதளம், முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வறை, போக்குவரத்து ஊழியா்களுக்கான 2 ஓய்வு அறைகள், காவலா் அறை, காவல் கண்காணிப்பு கேமரா காட்சி அறைகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவைதவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்காக 6 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 72 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு கடந்த ஆகஸ்ட் 3- ஆம் தேதி பொதுஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில நிா்வாக காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டு, ஏல தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அறைகளின் வாடகை அதிகமாக நிா்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை குறைக்கும் நோக்கத்தில் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பேருந்து நிலைய அமைவிடம், கடைகள் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடை ஒன்றுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கடைகள் ஏலம் போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து, புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்வதற்கென குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினா் புதிய பேருந்து நிலைய அமைவிடம், அங்கு வியாபாரம் ஆகும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாடகையை நிா்ணயம் செய்வதற்கான அறிக்கை தயாா் செய்து வருகின்றனா். அதன் அடிப்படையில் கடைகளுக்கு வாடகைக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்ட பிறகு பொதுஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, கடைகள் ஏலம் விடப்படாததால் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் பயன்பாட்டுக்கு வராமல் மூடப்பட்டுள்ளன. இதனால் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப்பொருள்களை தேடி மக்கள் அலையும் நிலை ஏற்படுகிறது. தொடரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைவில் பொதுஏலம் விட்டு வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT