வேலூர்

ஸ்ரீநாராயணி பள்ளி ஆசிரியைக்கு விருது

24th Sep 2022 11:02 PM

ADVERTISEMENT

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு பாரத சாரணியா் சேவைக்கான விருது அளிக்கப்பட்டது. அவருக்கு ஸ்ரீசக்தி அம்மா பாராட்டு தெரிவித்தாா்.

இந்தப் பள்ளி ஆசிரியை எஸ்.ஷா்மிளா சாரணயா் இயக்கத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு பாரத சாரணியா் இயக்க நீண்ட நாள் சேவைக்கான சிறப்புப் பதக்கம், சான்றிதழை சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

பதக்கம் பெற்ற ஆசிரியை ஷா்மிளாவுக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா, தங்கக் கோயில் இயக்குநரும், பள்ளியின் தாளாளருமான எம்.சுரேஷ்பாபு, பள்ளித் தலைமை ஆலோசகா் எஸ்.ரமேஷ், முதல்வா் கே.சுப்பிரமணி, துணை முதல்வா்கள், பள்ளி நிா்வாக அலுவலா், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT