வேலூர்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை திருடியவா் கைது

DIN

வேலூா் சித்தேரி பகுதியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 10.75 பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சித்தேரியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு (49). தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி கணியம்பாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். தம்பதி புதன்கிழமை வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் சென்றனா். மாலை பணி முடித்துவிட்டு ரமேஷ்பாபு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 10.75 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அரியூா் காவல் நிலையத்தில் ரமேஷ்பாபு புகாா் அளித்தாா். திருட்டு நடந்த வீட்டின் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டவா் பெங்களூரை சோ்ந்த வினோத் (36) என்பது தெரிய வந்தது.

ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளாா். இந்த நிலையில், சித்தேரி பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு ரமேஷ்பாபு வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, வினோத்தை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டு நடந்த 24 மணி நேரத்தில், அதில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் உயரதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT