வேலூர்

28-இல் முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 5-ஆம் கட்ட கலந்தாய்வு

DIN

வேலூா் முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான 5-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் அ.மலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் 20 சதவீத கூடுதல் இடங்கள், அத்துடன் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கான 5-ஆம் கட்ட கலந்தாய்வு 28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., பிபிஏ, பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

ஆண்கள் பிரிவில் பொதுப் பிரிவில் -38, பிற்படுத்தப்பட்டோா் -110, பிற்படுத்தப்பட்டோா் (எம்) 18, எம்பிசி 38, எஸ்.சி -78, எஸ்.சி (ஏ) -11, எஸ்டி -3 என மொத்தம் 296 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பெண்களுக்கான பிரிவில் பொதுப் பிரிவில் -12, பிசி- 19, பிசி (எம்) -3, எம்பிசி -13, எஸ்சி -17, எஸ்சி (ஏ) -2, எஸ்டி -2 என மொத்தம் 68 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த 5-ஆம் கட்ட கலந்தாய்வில் 254.9 முதல் 200 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பங்கேற்கலாம்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் தங்களது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT