வேலூர்

745 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

18th Sep 2022 11:38 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 745 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்க வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி, பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் 37-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாா்க்கெட் என ஒரே நாளில் 745 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில் கரோனா தடுப்பூசி, பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டினா்.

ADVERTISEMENT

வேலூா் மக்கான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி ஆய்வு செய்தாா். இதில், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி, நகா்நல அலுவலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT