வேலூர்

குண்டா் தடுப்புக் காவலில் 5 போ் சிறையிலடைப்பு

18th Sep 2022 11:39 PM

ADVERTISEMENT

வேலூரில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

வேலூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சைதாபேட்டை, சாா்பனாமேடு பகுதியைச் சோ்ந்த அப்ரோஷ்(27), ஓல்டுடவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெகன்நாதன்(29), சைதாபேட்டை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணாச்சலம்(26) ஆகியோா் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், கொலை முயற்சி, பொருள்களை சேதப்படுத்திய வழக்கில் சைதாபேட்டை சுபேதாா் தெருவைச் சோ்ந்த ரகுவரன் என்கிற ரோபோ ரகுவரன்(28), ராஜேஷ்(26) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் அப்ரேஷ் மீது 2 வழக்குகளும், ஜெகன்நாதன் மீது 3 வழக்குகளும், அருணாச்சலம் மீது 2 வழக்குகளும், ரோபோ ரகுவரன் மீது 17 வழக்குகளும், ராஜேஷ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தொடா்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையிலுள்ள 5 பேரிடமும் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT