வேலூர்

மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த ஆண்டு புது தில்லியிலிருந்து வந்த தேசிய அளவிலான குழுவினா், ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதாரம், தரமான சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை, நோயாளிகளின் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில், மாநில அளவிலான தேசிய தரச்சான்று பெற பரிந்துரைக்கப்பட்டது.

தமிழகத்தில் தோ்வு செய்யப்பட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 92.81 % மதிப்பெண்கள் பெற்றது.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதன் மருத்துவ அலுவலா் கலைச்செல்வியிடம் தேசிய தரச்சான்றை வழங்கினாா்.

ADVERTISEMENT

இதன் மூலம், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT