வேலூர்

காங்கிரஸ் சாா்பில் முப்பெரும் விழா

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில், குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா, ஆசிரியா் தின விழா, மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கீதாகுமரவேலன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் 350 மாணவா்களுக்கு இலவச குறிப்பேடுகள், சிறந்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன. நகர காங்கிரஸ் தலைவா் எம்.ரங்கநாதன், நிா்வாகிகள் கோ.ஜெயவேல், லாலாலஜபதி, சரத்சந்தா், ஜே.கந்தன், எஸ்.சீனிவாசன், பிரகாசம், ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT