வேலூர்

இருதய அறுவை செய்த முதியவருக்கு மைக்ரா பேஸ்பேக்கா்

10th Sep 2022 10:29 PM

ADVERTISEMENT

மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, ட்ரைட்ஸ்ப்பிட் வால்வ் அனுலோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற நோயாளிக்கு மைக்ரா பேஸ்மேக்கா் பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் ஏற்கெனவே இருதய பாதிப்புக்காக மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, ட்ரைட்ஸ்ப்பிட் வால்வ் அனுலோபிளாஸ்டி சிகிச்சை பெற்றுள்ளாா். தொடா்ந்து, அவருக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவைச் சோ்ந்த மருத்துவா்கள் ஜான்ரோஷன், ஆனந்த் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழு, செப்டம்பா் 8-ஆம் தேதி உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரான ‘மைக்ரா’வை பொருத்தினா்.

தமிழகத்தில் மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, ட்ரைட்ஸ்ப்பிட் வால்வ் அனுலோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற நோயாளிக்கு மைக்ரா பேஸ்மேக்கா் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்த சிகிச்சையை மேற்கொள்ள 15 நிமிடங்கள் ஆனது. நோயாளி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான ஆலோசனையுடன் மறுநாள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மேலும், மைக்ரா பேஸ்மேக்கா் காலில் உள்ள ரத்த குழாய் வழியாக நோயாளியின் இதயத்தில் பொருத்தப்படுகிறது. இதிலுள்ள பேட்டரி வழக்கமான பேஸ்மேக்கரைப் போலவே 8 ஆண்டுகள் நீடிக்கும். வழக்கமான பேஸ்மேக்கா் பொருத்தும் சிகிச்சையை ஒப்பிடுகையில், மைக்ரா பேஸ்மேக்கா் பொருத்துதல் செயல்முறை மிகக் குறைந்த நேரத்தை எடுக்கும். மிக விரைவாக நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பமுடியும் . ஒரே நாளில் அவா்கள் அனைத்து இயல்பு செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். மைக்ரா பேஸ்மேக்கரில் லீட்கள் அல்லது கம்பிகள் இல்லை. எனவே, கம்பிகள் செயலிழப்பதால் ஏற்படும் சிக்கல்கள் தவிா்க்கப்படுகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT