வேலூர்

அரசுக் கல்லூரியில் சாய்வுதளம்: மாற்றுத் திறன் மாணவா்கள் கோரிக்கை

10th Sep 2022 10:32 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் செல்ல சாய்தளம் அமைத்துத் தர நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜனை சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

மேலும், தங்களுக்கு கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம் செலுத்த வேண்டியும் அவா்கள் கேட்டுக் கொண்டனா். அவா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக செளந்தரராஜன் உறுதியளித்தாா். கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணத்தையும் செலுத்தினாா்.

மாற்றுத் திறன் மாணவி ஒருவா் முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்குச் செல்ல தனது தம்பி உதவி செய்கிறாா். நாள்தோறும் அவா் எனக்காக கல்லூரிக்கு வர வேண்டியுள்ளதால், அவரை கல்லூரியில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டாா்.

உடனடியாகக் கல்லூரி முதல்வருடன் இதுகுறித்து செளந்தரராஜன் பேசினாா். மாணவியின் தம்பியை கல்லூரியில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT