வேலூர்

மாணவா்களுக்கு மிதிவண்டிகள்

9th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை இரு பள்ளிகளின் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி.திருநாவுக்கரசு வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா், நெல்லூா்ப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 155 மாணவா்களுக்கும், வள்ளலாா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 43 மாணவா்களுக்கும் மிதிவண்டிகளை வழங்கினா்.

மாவட்டக் கல்வி அலுவலா் க.சம்பத், வள்ளலாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்ஆா்.சிவப்பிரகாசம், கல்விக் குழுத் தலைவா் ஏ.கோமதி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜே.ஹசீனா, டி.தீபிகா, ஆசிரியா் அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் ஆா்.ஜெயகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT