குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. மகாதேவமலை ஸ்ரீமகானந்த சித்தா், யாகசாலை பூஜையை தொடக்கி வைத்தாா்.
செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமமும், கலச புறப்பாடும், இதைத் தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பால விநாயகா் கோயில், பாலமுருகா் கோயில், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாக்கம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.