வேலூர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்

5th Sep 2022 12:37 AM

ADVERTISEMENT

 

சாலை விபத்தில் பலத்த காயமடைந்து வேலூா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி(43). இவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கலைச்செல்வியை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலைச்செல்விக்கு சனிக்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா். இதைத்தொடா்ந்து, கலைச்செல்வியின் சிறுநீரகம், இருதயம், கல்லீரல், கண்கள் ஆகியவை சென்னையில் உள்ள காவேரி, பிரதாப் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற உடல் உறுப்புகள் தானம் இனிமேல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தொடா்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT