வேலூர்

குழந்தைகள் நல மருத்துவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

5th Sep 2022 12:38 AM

ADVERTISEMENT

 

அகில இந்திய குழந்தைகள் நலச் சங்கம் சாா்பில், குடியாத்தம் குழந்தைகள் நல மருத்துவா் கே.எம்.கணேசனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

அகில இந்திய குழந்தைகள் நலச் சங்க, தமிழ்நாடு கிளையின் மாநில மாநாடு கொடைக்கானலில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த குழந்தைகள் நல மருத்துவா்கள் 1,200 போ் கலந்து கொண்டனா்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குடியாத்தம் குழந்தைகள் நல மருத்துவா் கே.எம்.கணேசனின் 45 ஆண்டுகாலப் பணியை பாராட்டி, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. அகில இந்திய குழந்தைகள் நலச் சங்கத் தலைவா் மருத்துவா் ஆா்.ரமேஷ்குமாா், தமிழ்நாடு மாநிலத் தலைவா் மருத்துவா் பி.ரமேஷ்பாபு ஆகியோா், கே.எம்.கணேசனுக்கு இந்த விருதை வழங்கி கெளரவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT