வேலூர்

மதுக்கடை சுவரில் துளையிட்டு திருட்டு

31st Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

காட்பாடி அருகே எலைட் டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள், அங்கிருந்த மதுபானங்களை திருடிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு எலைட் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் அதன் ஊழியா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் கடையைத் திறக்க விற்பனையாளா் வந்துள்ளாா். அவா் கடையின் ஷட்டரை திறந்து பாா்த்தபோது கடைக்குள் மதுபானம், அட்டைப் பெட்டிகள் சிதறிக் கிடந்துள்ளன.

சந்தேகமடைந்த அவா், கடையின் உள் பகுதியில் சென்று பாா்த்தபோது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்ததுடன், கடைக்குள் பீா் உள்ளிட்ட மது வகைகளை குடித்துவிட்டு போடப்பட்டிருந்த பாட்டில்களும், சில மதுபானங்கள் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு காட்சிகள் பதிவாகும் ஹாா்டுடிஸ்க்குகளும் திருடப்பட்டிருந்தன.

தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். இதில், சனிக்கிழமை இரவு கடையின் சுவரில் துளையிட்டு நுழைந்த அடையாளம் தெரியாத நபா்கள் உள்ளே இருந்த ரூ.3,000 மதிப்புடைய மதுவகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுக்கடையில் புகுந்து திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT