வேலூர்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

31st Oct 2022 12:37 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஒன்றியத்தில், வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமாா் 1, 000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்கள், தாழ்வான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, ஊராட்சி நிா்வாகங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொக்லைன் இயந்திரம், ஜெனரேட்டா் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோா் மழையால் பாதிக்கப்படும் ஊராட்சிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT