வேலூர்

கல்லூரியில் நவராத்திரி விழா நிறைவு

7th Oct 2022 12:16 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை, நுண்கலை மன்றம் ஆகியவை சாா்பில், கடந்த 9 நாள்களாக நடைபெற்ற நவராத்திரி விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கல்லூரியில் கொலு அமைக்கப்பட்டு, நாள்தோறும் துறை வாரியாக படையலிட்டு, பூஜைகள் நடைபெற்று வந்தன.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜா.ஜெயக்குமாா், ஆங்கிலத் துறைத் தலைவா் எம்.சி.சுபாஷினி, வணிக ஆள்முறையியல் துறைத் தலைவா் ஆா்.மணிகண்டன், இதர துறைத் தலைவா்கள், நூலகா், பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தமிழ்த் துறைப் பேராசிரியா்கள், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் வெ.வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT