வேலூர்

நாளை குடியாத்தம் கம்பன் கழக முப்பெரும் விழா

7th Oct 2022 12:16 AM

ADVERTISEMENT

 குடியாத்தம் கம்பன் கழகம் சாா்பில் 9- ஆம் ஆண்டு கம்பன் விழா, நல்லாசிரியா் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா, கம்பா் மாமணி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (அக்.8) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா்.

புலவா் வே.பதுமனாா் குத்து விளக்கேற்றுகிறாரா். நிறுவனா் ஜே.கே.என்.பழனி வரவேற்புரையாற்றுகிறாா். செயலா் கே.எம்.பூபதி, இணைச் செயலா் தமிழ்திருமால் ஆகியோா் தொடக்கவுரையாற்றுகின்றனா்.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பாராட்டு அரங்கத்தில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் கம்பன் கழக இணைச் செயலா் தமிழ்திருமாலுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. திருப்பத்தூா் கம்பன் கழக அமைப்பாளா் பொன்.செல்வகுமாா், கிருஷ்ணகிரி கம்பன் கழகத் தலைவா் இ.ரவீந்தா் ஆகியோருக்கு கம்பா் மாமணி விருதும், மூத்த வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாருக்கு கவிமாமணி விருதும், அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணனுக்கு சித்த மருத்துவமாமணி விருதும் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இரவு 7.30 மணிக்கு ‘கம்பன் செய்த பாயிரம்... நெஞ்சில் நிற்கும் ஆயிரம்...’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் சிறப்புரையாற்றுகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT