வேலூர்

இஸ்ரோ 3 நாள் ஆய்வு கண்காட்சி: வேலூா் விஐடியில் இன்று தொடக்கம்

DIN

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு தொடா்பான கண்காட்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிடலாம்.

உலக விண்வெளி வாரத்தையொட்டி இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு தொடா்பான கண்காட்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) தொடங்க உள்ளது. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநா் ராஜீவ்சிங் தொடக்கி வைக்க உள்ளாா். கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிடலாம். கட்டணம் கிடையாது.

இந்த கண்காட்சியில் ராக்கெட், பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், அதுதொடா்பான தகவல்கள் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதேபோல், அறிவியல் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

குறிப்பாக மாணவா்களுக்கு வினாடி-வினா, ஓவியம், பேச்சுப் போட்டிகள், சுவரொட்டி, மாதிரி வடிவமைப்பு போட்டிகள் ஆகியவையும் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ள்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

கண்காட்சியையொட்டி விண்வெளி நடைபயணம் (நல்ஹஸ்ரீங் ரஹப்ந்) என்ற விழிப்புணா்வு நடைபயணம் சனிக்கிழமை காலை சித்தூா் பேருந்து நிலையத்திலிருந்து விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற உள்ளது. இந்த விழிப்புணா்வு நடைபயணத்தில் மாணவா்கள் பங்கேற்லாம். இந்த தகவல் விஐடி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT