வேலூர்

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

7th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்ட சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கிடும் வகையில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (அக். 8) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வேலூா் வட்டத்தில் பாலமதி, அணைக்கட்டு வட்டத்தில் ஆசனாம்பட்டு, காட்பாடி வட்டத்தில் கீரைச்சாத்து, குடியாத்தம் வட்டத்தில் அக்ராவரம், கே.வி.குப்பத்தில் வேப்பங்கனேரி, போ்ணாம்பட்டு வட்டத்தில் மசிகம்மதுரா மிட்டப்பள்ளி ஆகிய கிராமங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். தவிர, பொது விநியோகத்திட்ட பொருள்களின் தரம் குறித்த புகாா்களையும் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT