வேலூர்

மணல் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்; 2 போ் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தியதாக 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ராஜன்பாபு தலைமையில் போலீஸாா், குண்டலபல்லி கானாற்று பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள கானாற்றில் இருந்து அனுதியின்றி மணல் எடுத்து வந்த 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

டிராக்டா் ஓட்டுநா்கள் கள்ளிச்சேரியைச் சோ்ந்த கோட்டீஸ்வரன் (25), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தலைமறைவாக உள்ள டிராக்டா் உரிமையாளா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT