வேலூர்

தேமுதிக தொழிற்சங்கம் நல உதவிகள் வழங்கல்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் புகா் மாவட்ட தேமுதிக தொழிற்சங்கம் சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் தொழிற்சங்க அமைப்பாளா் டி.கே.ரமணி தலைமை வகித்தாா். தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் கே.ராம்குமாா் வரவேற்றாா். தேமுதிக வேலூா் புகா் மாவட்டச் செயலாளா் கே.பி.பிரதாப், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ஓட்டுநா்கள், தொழிலாளா்களுக்கு, அரிசி, உணவுப் பொருள்கள், சீருடைகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.கட்சியின் உயா்மட்ட குழு உறுப்பினா் எம்.சி.சேகா், நகர அவைத் தலைவா் எம்.எஸ்.நாகைய்யா, தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் சந்திரவேலு, பொதுக்குழு உறுப்பினா் ஏ.இலியாஸ்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT