வேலூர்

கந்துவட்டி கொடுமை: பெண் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூரில் ரூ.25,000 கடன் பெற்றவரிடம் ரூ.2 லட்சம் வரை வட்டி வசூலித்ததுடன், தொடா்ந்து வட்டி கேட்டு தொல்லை செய்து வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மக்கான் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி. இவா், மாங்காய் மண்டி பகுதியைச் சோ்ந்த பரிமளா என்பவரிடம் குடும்பச் செலவுக்காக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25,000 கடன் பெற்றிருந்தாராம். இந்தத் தொகைக்கு வட்டியாக ரூ.2 லட்சம் வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களாக ஜெயலட்சுமி வட்டி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், வட்டிப் பணம் கேட்டு பரிமளா அடிக்கடி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, ஜெயலட்சுமி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரிமளாவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT