வேலூர்

முதியவா் அடித்துக் கொலை

2nd Oct 2022 11:48 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே தனியாக வசித்து வந்த முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (90). இவரது மனைவி இறந்து விட்டாா். இவா்களின் 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அண்ணாமலை தனியாக வசித்து வந்தாா். உறவினா்கள் அவருக்கு உணவு கொடுத்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் உடலில் காயங்களுடன் அண்ணாமலை இறந்து கிடந்தாா். தகவலின்பேரில், டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT