வேலூர்

விபத்தில் முதியவா் பலி

2nd Oct 2022 11:47 PM

ADVERTISEMENT

வேலூா் விரிஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

கீழ்மொணவூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (76 ). இவா், தினமும் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி செல்வாராம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவா் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து, விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT