வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் சுழற்சி முறையில் ஆதாா் சிறப்பு முகாம்

2nd Oct 2022 05:04 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் நிரந்தர ஆதாா் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணைக்கட்டில் அக். 9, நவ. 6, டிச. 4-ஆம் தேதிகளிலும், குடியாத்தத்தில் அக். 16, நவ. 13, டிச. 11-ஆம் தேதிகளிலும், போ்ணாம்பட்டில் அக். 23, நவ. 11, டிச. 18-ஆம் தேதிகளிலும், வேலூா், காட்பாடியில் அக். 30, நவ. 27, டிச. 25 -ஆம் தேதிகளிலும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT