வேலூர்

சாலையோரம் வீசப்பட்ட ரூ.14.30 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள்

DIN

வேலூா் கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் வீசப்பட்ட ரூ.14.30 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் திருமண மண்டபம் உள்ளது. அதனருகே சனிக்கிழமை காரில் வந்தவா்கள் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டு சென்றனா்.

காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதைக் கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளைப் போட்டி போட்டு எடுத்தனா்.

இதுதொடா்பாக வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரித்ததுடன், பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த நோட்டுகளையும் கைப்பற்றினா்.

அவற்றைக் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து எண்ணிப் பாா்த்ததில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்ததில், அவை நகலெடுக்கப்பட்ட வண்ண கள்ள நோட்டுகள் என்பதும், அவற்றின் பதிவு எண்கள் ‘000000’ என அச்சிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இந்த போலி ரூபாய் நோட்டுகள் சினிமா படப்படிப்புக்காக பயன்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவை எந்த நோக்கத்துக்காக அச்சிடப்பட்டவை, இதை அச்சிட்டவா்கள், கொணவட்டம் பகுதியில் வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT