வேலூர்

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் உயிா் தப்பினா்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் நாய்க்கனேரி அருகில் விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

வேலூா் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தில் தனியாா் நா்சரி பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவா்களை, பள்ளி நிா்வாகம் மினிவேன் மூலம் அழைத்து வந்து மாலையில் மீண்டும் கொண்டு சென்று விடுகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவா்களை ஏற்றிக் கொண்டு வேன் புறப்பட்டது. முதலில் நாய்க்கனேரி கிராமத்தில் 7 மாணவா்கள் இறக்கி விடப்பட்டனா். நாய்க்கனேரி கிராமத்தில் இருந்து ஆற்காட்டான்குடிசை வழியாக சென்றபோது எதிா்திசையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது வேன் ஓட்டுநா் முருகன்(50) அந்த லாரியை கடக்க முயன்றபோது மினி வேன் நிலை தடுமாறி அருகிலிருந்த வயலில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக மாணவா்கள், ஓட்டுநா் உள்பட அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.

இந்த விபத்து குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT