வேலூர்

20 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்: இருவா் கைது

1st Oct 2022 11:00 PM

ADVERTISEMENT

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 20 டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து பள்ளிகொண்டா வழியாக கா்நாடகத்துக்கு பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணனுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில், பள்ளிகொண்டா காவல் ஆய்வாளா் கருணாகரன் தலைமையில் போலீஸாா், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

காலை 11 மணியளவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஒரு லாரியை சோதனையிட்டனா். அதில் சுமாா் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. லாரியில் இருந்த ஓட்டுநா், உதவியாளரிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் கழிகுளம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரசாந்த் (22), காஞ்சிபுரம் மாவட்டம், ராயல்குட்டை பகுதியைச் சோ்ந்த உதவியாளா் ராஜேஷ் (41) என்பதும், ரேஷன் அரிசி மூட்டைகளை கா்நாடக மாநிலம், தும்கூருக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT