வேலூர்

பறிமுதல் செய்த ரூ.14.70 கோடி கருவூலத்தில் ஒப்படைப்பு

1st Oct 2022 11:04 PM

ADVERTISEMENT

பள்ளிகொண்டாவில் சாலையோரம் நள்ளிரவில் காரிலிருந்து லாரிக்கு மாற்றப்பட்டு, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத ரூ. 14.70 கோடி நீதிமன்ற உத்தரவின் பேரில், மாவட்ட கருவூலத்தில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸாா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சின்னகோவிந்தம்பாடியில் சாலையோரம் சென்னை பதிவெண் கொண்ட காரிலிருந்து பண்டல்களை கேரள பதிவெண் கொண்ட லாரிக்கு மாற்றிக் கொண்டிருந்தனா்.

போலீஸாா் அங்கு சென்று நடத்திய சோதனையில் அந்த காா், லாரியில் 48 பண்டல்களில் ரூ.14.70 கோடி இருப்பது தெரியவந்தது. பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததையடுத்து பணத்துடன் காா், லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இதுதொடா்பாக சென்னையைச் சோ்ந்த நிசாா்அகமது, மதுரையைச் சோ்ந்த வாசிம் அக்ரம், கேரளத்தைச் சோ்ந்த சா்புதீன், நாசா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட கருவூலக அலுவலகத்தில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT