வேலூர்

கிராவிடாஸ் அறிவியல் திருவிழாவில் ரோபோக்களின் போா் தொழில்நுட்பம்

1st Oct 2022 11:02 PM

ADVERTISEMENT

வேலூா் விஐடியில் நடைபெற்று வரும் கிராவிடாஸ் அறிவியல் தொழில்நுட்பத் திருவிழாவில் ரோபோக்களின் போா் தொழில்நுட்பப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பாா்வையிட்டாா்.

கிராவிடாஸ் எனும் அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து மொத்தம் 13,000 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களின் சுமாா் 150 அறிவியல் ஆய்வு படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா்.

2-ஆம் நாளான சனிக்கிழமை ரோபோக்களின் எந்திர போா், வானில் ட்ரோன்களின் போட்டி அணிவகுப்பு நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. இந்த ரோபோ போா் தொழில்நுட்பம் குறித்து விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பாா்வையிட்டாா். அப்போது, இப்புதிய தொழில்நுட்பத்தை மாணவ, மாணவிகள் விளக்கினா்.

அப்போது, விஐடி துணைவேந்தா் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் டி.ஜெயபாரதி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT