வேலூர்

நெல் கொள்முதல் முறைகேடு: திமுக பிரமுகா், விஏஓ கைது

DIN

நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.8 கோடிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு தொடா்பாக, திமுக பிரமுகா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு நெல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக, வேலூா் சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பயன்பெறாமல் இடைத்தரகா்கள், வியாபாரிகள், அதிகாரிகள் கூட்டமாகச் சோ்ந்து அரசுக்கு ரூ. 8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், இதுவரை 30 பேரை கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், வேலூா் சிபிசிஐடி ஆய்வாளா் மகாலட்சுமி இந்த முறைகேடு வழக்குத் தொடா்பாக, அரக்கோணத்தை அடுத்த சிறுகரும்பூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் குமரவேல் பாண்டியன், மேல்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் குமரவேல் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தாா். அவா்கள் இருவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

குமரவேல் பாண்டியனின் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக போலியாக சிட்டா அடங்கலை கிராம நிா்வாக அலுவலா் குமரவேல் வழங்கி, முறைகேடு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இருவரும் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT