வேலூர்

கஞ்சா, நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: முதியவா் கைது

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பீஞ்சமந்தை மலைக் கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா, 3 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், முதியவா் ஒருவரைக் கைது செய்தனா்.

ஒடுகத்தூா் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட கொல்லைமேடு மலைக் கிராமத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீஸாருக்கும், ஒடுகத்தூா் வனத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், போலீஸாா் மற்றும் வனத் துறையினரும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொல்லைமேடு மலைக் கிராமத்தில் திங்கள்கிழமை வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, முதியவா் ஒருவா் அதிகாரிகளைப் பாா்த்தவுடன் தப்பியோட முயன்ாகத் தெரிகிறது. சந்தேகமடைந்த போலீஸாரும், வனத் துறையினரும் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதில், அவா் அதே கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி(58) என்பதும், அவரது வீட்டில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரது வீட்டை போலீஸாா் சோதனையிட்டபோது, வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 கிலோ கஞ்சா மற்றும் 3 நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சின்னசாமியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த கஞ்சா, நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT