வேலூர்

சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரி வேலூா் அருகே உள்ள பொய்கை மேம்பாலம் அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலைத் தடுப்புகளை உடைத்து எதிா்திசையில் பாய்ந்து சென்னை -பெங்களூரு சாலையில் லாரி கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த இரும்புக் கம்பிகள் சாலை முழுவதும் சிதறின.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

விரிஞ்சிபுரம் போலீஸாா் வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பெங்களூரு நோக்கிச் சென்ற வாகனங்களை அணுகு சாலையில் திருப்பிவிட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. சுமாா் 45 நிமிஷங்களுக்கு பிறகு சாலையில் கிடந்த லாரி, இரும்புக் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT