வேலூர்

சிறுத்தை தாக்கியதில் பசு உயிரிழப்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசு உயிரிழந்தது.

குடியாத்தம் அருகே வனப் பகுதிகளில் வசிக்கும் சிறுத்தைகள், இரை தேடி வன எல்லையில் உள்ள கிராமங்களில் நடமாடத் தொடங்கியுள்ளன. தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோா்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, மோடிகுப்பம் உள்ளிட்ட வன எல்லையில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாகவும், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மோடிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெங்கடேசனுக்குச் சொந்தமான பசு செவ்வாய்க்கிழமை காலை வன எல்லையில் மேய்ச்சலுக்காக சென்றுள்ளது. அப்போது சிறுத்தை ஒன்று பசுவை தாக்கியுள்ளது. இதில் பசு உயிரிழந்தது.

அப்போது அங்கிருந்த விவசாயிகள் கூச்சலிடவே சிறுத்தை வனப் பகுதிக்குள் ஓடி விட்டது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் அந்தக் கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன எல்லையில் உள்ள கிராமங்களில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், வனத் துறையினா் கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மோடிகுப்பம் ஊராட்சித் தலைவா் லாவண்யா ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT