வேலூர்

கல்லூரியில் வன்முறை தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியின் ஐசிசி குழு, சைபா் க்ரைம் ஆகியவை இணைந்து வன்முறை தடுப்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, கல்லூரி கலையரங்கில் மாணவிகளுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெற்றிவேல் வரவேற்றாா். வேலூா் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.தேவேந்திரன், குழந்தைகள், பெண்களின் உரிமைகள், மகளிா் பாதுகாப்பு, பெண்களுக்கான நலத் திட்டங்கள், போக்ஸோ சட்டம் ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி பொருளாளா் கே.முருகவேல், கல்வி இயக்குநா் எம்.பிருந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஐசிசி ஒருங்கிணைப்பாளா் டி.சுமதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT