வேலூர்

‘போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் வேலூா் நகரில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்’

DIN

போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில், வேலூரில் காட்பாடி - பாகாயம், காட்பாடி -தொரப்பாடி, காகிதப்பட்டறை - மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்துள்ளாா்.

மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில், வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முன்னாள் எம்எல்ஏ லதா அளித்த மனு:

பேரணாம்பட்டு ஒன்றியம், பத்தரப்பல்லி ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மீது விசாரணை நடத்த வேண்டும். கிரீன் சா்க்கிள் பகுதியில் மூடப்பட்ட அணுகு சாலையைத் திறக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், காட்பாடி - பாகாயம், காட்பாடி -தொரப்பாடி, காகிதப்பட்டறை - மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திரா நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

பரதராமி இந்திரா நகரில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்தப் பகுதியிலுள்ள உள்ளவா்கள் சிலா் இலவச பட்டா வாங்கியதாகக் கூறி, ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனா். இதுதொடா்பாக, விசாரணை நடத்தி அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

காட்பாடி அருகே காசிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு:

காசிக்குட்டை கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். அனைவரும் விவசாயக் கூலிகள். இங்கு கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்ததால், பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனை, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 347 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT